உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின் கசிவால் டிவி உள்பட பொருட்கள் எரிந்து நாசம்

மின் கசிவால் டிவி உள்பட பொருட்கள் எரிந்து நாசம்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த அங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 34, இவர் தனது விவசாய நிலத்தில், வீடு கட்டி வருகிறார். கடந்த ஏப்., 27ல், விவசாய பணியில் இருந்தபோது, தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த ஷோபா, பிரிட்ஜ், 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருந்தன. விவசாய நிலத்தில், வீடு தனியாக இருந்ததால் இச்சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. சிலம்பரசன் கால்முறிவு சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தபோது, ஷோபா, பிரிட்ஜ், 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து இருந்தது குறித்து, மத்துார் போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை