உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.4.75 கோடி பணத்துடன் நகை கடைக்காரர் ஓட்டம்

ரூ.4.75 கோடி பணத்துடன் நகை கடைக்காரர் ஓட்டம்

ஓசூர்:ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ், 47, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேலகொண்டப்பள்ளியில் தங்கி, சரஸ்வதி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார்.இவர் மற்ற கடைகளை விட சவரனுக்கு, 2,000 ரூபாய் குறைவாக கொடுத்ததால், மக்கள் பலர் இவரிடம் முன்கூட்டியே பணத்தை கொடுத்து, சில மாத இடைவெளியில் தங்க நகையை வாங்கிக் கொள்வது வழக்கம்.அதுபோல பலர், ஓம்பிரகாஷிடம் நகையை அடமானம் வைத்திருந்தனர். ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரவிக்குமார், 37, என்பவர், 3 சவரன் நகைக்காக, கடந்தாண்டு 1.30 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார்.நவ., 28ல் நகை வழங்குவதாக ஓம்பிரகாஷ் கூறியிருந்தார். இதனால், நவ., 28 காலை நகைக்கடைக்கு ரவிக்குமார் சென்ற போது, மூடப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீசில் ரவிக்குமார் புகார் செய்தார்.மத்திகிரி போலீசார் விசாரணையில், பேலகொண்டப்பள்ளி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டவர்களிடம் நகை தருவதாகக் கூறி, 4.75 கோடி ரூபாயை வசூல் செய்து அவர் மோசடி செய்து, தலைமறைவானது அம்பலமாகியது.பொதுமக்கள் அடமானம் வைத்த நகை, ஓம்பிரகாஷிடம் உள்ளதால் பலர் கலக்கம் அடைந்துள்ளனர். மத்திகிரி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி