உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்

கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்

கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும்தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்கிருஷ்ணகிரி, அக். 3-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.சிறு குறு தொழில்கள் பிரிவில் இத்தொழிற்சாலைகளை நடத்துவதில், வங்கி கடன் வட்டிவிகிதம் உயர்வு, போலி பில்கள், மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பெரும் சிரமம் ஏற்படுவதாக கிருஷ்ணகிரி கிரானைட் சிறு குறு தொழில்சங்கத்தினர் கூறினர். இது குறித்து கடந்த, 30ல் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பர்கூர், அச்சமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 150க்கும் மேற்பட்ட கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ