முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்
ஓசூர், அஓசூர், பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா நேற்று துவங்கியது. காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.சிறப்பு ஹோமங்கள், நவகலச பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வரும், 26ம் தேதி, சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி, 27ம் தேதி சூரசம்ஹாரம், 28ம் தேதி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. அதேபோல், ஓசூர் பிருந்தாவன் நகர் வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவிலில், 13ம் ஆண்டு கந்தசஷ்டி மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று முன்தினம் துவங்கியது. கணபதி பூஜை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வரும், 26ம் தேதி, ஏகதின லட்சார்ச்சனை, 27 ல், சூரசம்ஹாரம், 28ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.ஓசூர் முல்லை நகர் காயத்ரி அம்பாள் கோவிலில், கந்தசஷ்டி விழா மற்றும் 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.