மேலும் செய்திகள்
தமிழ்நாடு பிராமணர் சங்க மாதாந்திர கூட்டம்
23-Sep-2025
ஓசூர், தமிழ்நாடு பிராமணர் சங்க ஓசூர் கிளை தாம்பிராஸ் சார்பில், விஜயதசமியை முன்னிட்டு ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ, 100 அடி சாலையிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயணன் பாலமணிகண்டன் கோவிலில், உலக நன்மை வேண்டியும், ஹிந்து சம்பிரதாயங்களை அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையிலும், 13 வயதிற்கு உட்பட்ட, 19 குழந்தைகளுக்கு நவராத்திரி கன்யா பூஜை நேற்று காலை நடந்தது.நவராத்திரி என்றாலே அம்பிகையை வழிபடுகிறோம். கன்யா குழந்தைகளை அம்பிகையாக பாவித்து, 2ம் ஆண்டாக கன்யா பூஜை நடத்தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஓசூர் கிளை தலைவர் நாகராஜன், மகளிரணி தலைவி ரோகிணி கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Sep-2025