உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கர்நாடக பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தமிழக அரசு பஸ்களில் நெரிசல்

கர்நாடக பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தமிழக அரசு பஸ்களில் நெரிசல்

ஓசூர்:கர்நாடகாவில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பெங்களூரு பஸ்களில் கூட்டம் அலைமோதியது. கர்நாடகா மாநிலத்தில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு, ஆனைக்கல், அத்திப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும், 80க்கும் மேற்பட்ட கர்நாடகா மாநில அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்ததால், 40 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. ஓசூரிலிருந்து பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் செல்ல, கர்நாடகா மாநில அரசு பஸ்களில் பாஸ் எடுத்து வைத்திருந்த தொழிலாளர்கள், மாணவ - மாணவியர், குறைந்தளவு இயக்கப்பட்ட பஸ்களில் ஏற முண்டியடித்தனர். ஓசூர் வழியாக பெங்களூருக்கு தினமும், 340 நடைக்கு மேல், தமிழக அரசு புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அப்படியிருந்தும் பெங்களூரு செல்லும், தமிழக அரசு பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை