உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காட்டிநாயனப்பள்ளி அரசு பள்ளி ஆண்டு விழா

காட்டிநாயனப்பள்ளி அரசு பள்ளி ஆண்டு விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கிரிஜா லட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் இந்துலதா வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியை சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், ஆசிரியர் பயிற்றுனர் தமிழ்தென்றல், பள்ளி மேலாண்மை குழு தலைவி சந்தியா மேரி, துணைத்தலைவி அனிதா உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், நாடகம் ஆகியவை நடந்தது. மேலும், கடந்தாண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய, 20 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியை, பட்டதாரி ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, அம்சவேணி ஆகியோர் செய்திருந்தனர். பட்டதாரி ஆசிரியர் திருப்பதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை