உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாடியிலிருந்து தவறி விழுந்த கென்யா வாலிபர் சாவு

மாடியிலிருந்து தவறி விழுந்த கென்யா வாலிபர் சாவு

சேலம் :கென்யா நாட்டை சேர்ந்தவர் கெகோங்கோ டேனியல், 29. சேலம், கன்னங்குறிச்சி அண்ணா நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, அம்மாபேட்டையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்ந்து படித்தார். பின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இவருடன் இவரது காதலி, உகாண்டாவை சேர்ந்த நபுகீரா ஹெலன், 33, தங்கியிருந்தார். இவர் புதுச்சேரியில் படிக்கிறார்.கடந்த, 27ல் மது அருந்திய டேனியல், முதல் மாடி சுவரில் அமர்ந்து போனில் பேசிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். நபுகீரா ஹெலன் கூச்சலிட, அருகில் இருந்தவர்கள், டேனியலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலை, இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவரிடம் கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்தபோது, தவறிதான் விழுந்ததாக தெரிவித்தார். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதனால் அவரது உடலை சொந்த ஊர் எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி