மேலும் செய்திகள்
காதியில் சிறப்பு விற்பனை துவக்கம்
03-Oct-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில், காந்தியின், 156வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு கலெக்டர் தினேஷ்குமார் மாலை அணிவித்தார். தொடர்ந்து, தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்து கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கதர் விற்பனையை ஊக்குவிக்க, 2025-2026ம் ஆண்டிற்கு, 2.93 கோடி ரூபாய் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 83.55 லட்சம் ரூபாய் மதிப்பில் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் மாநில அரசு மற்றும் கதர் கிராம தொழில்கள் ஆணைக்குழுவினரால், கதர் விற்பனைக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கதர், பட்டு, பாலியஸ்டர் துணிகளுக்கு தலா, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே, காதி கிராப்ட் விற்பனை நிலைய கிராமபுற ஏழை மக்களின் மேம்பாட்டு நலன் கருதி, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் கதர் துணி ரகங்களை, அதிகளவில் வாங்கி ஆதரவு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், காதிகிராப்ட் விற்பனை மேலாளர்கள் ஜானகிராமன், நாகராஜன், தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
03-Oct-2025