உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆக.,27ல் மாதாந்திர விளையாட்டு போட்டி

ஆக.,27ல் மாதாந்திர விளையாட்டு போட்டி

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வரும் 27ம் தேதி நடக்கிறது. மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவின் சார்பாக ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வரும் 27ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் நடக்கிறது. தடகளம் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளில் நடக்கும் போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வயது பிரிவை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.இதில், 100 மீட்டர், 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப், போல் வால்ட், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்படும். 500 மீட்டர், 100, 200, 400 மீட்டர் பிரி ஸ்டைல், பேக் ஸ்டோர்க், பிரஸ்ட் ஸ்டோர்க், பட்டர்பிளை ஆகிய பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியே நீச்சல் போட்டிகள் நடத்தப்படும்.போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாதாந்திர விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்கள் நடத்தப்படும் தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீராங்கணைகள் 2012 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னையில் நடக்கும் மாநில போட்டிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். மாநில அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களால் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்