உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விநாயகர் சிலை கரைக்க வழிப்பறி பணம் கேட்டு தாக்கிய 3 பேர் கைது

விநாயகர் சிலை கரைக்க வழிப்பறி பணம் கேட்டு தாக்கிய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, வாகனங்களில் வந்தோரை மிரட்டி பணம் பறித்தும், பணம் தர மறுத்தவர்களை தாக்கிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்துள்ள பாசிப்பட்டியில் சாலையோரம் விநாயகர் சிலை பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. வெலகலஅள்ளி, பாறைகொட்டாய், குருக்கல்நத்தம், கொத்தலம், திம்மாராயனஅள்ளி, மாரவாடி ஆகிய கிராமங்களுக்கு செல்வோர் பாசிப்பட்டி வழியாகத்தான் செல்லவேண்டும். நேற்று முன்தினம் மாலை பாசிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி, அன்பரசு, வீராசாமி, சிவன் உள்ளிட்ட சிலர் சாலையில் நின்றுக்கொண்டு, அந்த வழியே வாகனங்களில் வருவோரை மிரட்டி, விநாயகர் சிலை கரைக்க நிதி கேட்டுள்ளனர். பணம் கொடுக்காதவர்களிடம் வலுக்கட்டாயமாக பணத்தை பறித்துள்ளனர். அந்த வழியே வாகனங்களில் வந்து, பணம் கொடுக்க மறுத்த வெலகலஅள்ளி சாந்தமூர்த்தி, சத்தியமூர்த்தி, ராஜன், பைரேசன், சுரேஷ், மற்றொரு ராஜன், கோவிந்தராஜ், குமரேசன் உள்ளிட்ட பலரை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சாந்தமூர்த்தி, சத்தியமூர்த்தி, ராஜன் உள்ளிட்ட பலர் சிகிச்øகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாலையில் வந்தோரை வழிமறித்து தாக்கிய சம்பவம் அறிந்த வெலகலஅள்ளியை சேர்ந்த பொதுமக்கள், பாசிப்பட்டி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வெலகலஅள்ளியை சேர்ந்தவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட பாசிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி, அன்பரசு, வீராசாமி ஆகியோரை தாலுகா எஸ்.ஐ., மதேஸ்வரி கைது செய்தார். தாக்குதலில் ஈடுபட்ட பாசிப்பட்டியை சேர்ந்த மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், வெலகலஅள்ளி பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. போலீஸார், அந்த பகுதியல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை