உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சமீபத்தில் வெளியான வி.ஏ.ஓ., தேர்வு முடிவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில், கிருஷ்ணகிரி ஆக்ஸ்போர்டு மையத்தில் படித்தவர்கள் 5 பேர் ஆவர். இவர்களுக்கு பாராட்டு விழா கிருஷ்ணகிரியில் நடந்தது. மைய இயக்குனர் சாருமதி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சின்னையன் தேர்வில் வெற்றி பெற்ற வரதன், கோவிந்தராஜ், முனியன், தாரணி, சங்கர் ஆகியோருக்கு பரிசினை வழங்கினார்.விழாவில், கிருஷ்ணகிரி துணை தாசில்தார் கோவிந்தன். உள்ளாட்சி தணிக்கை துறை உதவி ஆய்வாளர் செந்தில்குமார், புள்ளியில் அலுவலர் குப்புசாமி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி