உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நாள் முழுவதும் எரியும் சோடியம் விளக்கு

நாள் முழுவதும் எரியும் சோடியம் விளக்கு

ஓசூர்: ஓசூர் தாசில்தார் அலுவலகத்தில் நாள் முழுவதும் எரியும் சோடியம் விளக்காமல், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.ஓசூர் தாசில்தார் அலுவலகம் முன் உள்ள சோடியம் மின் விளக்கு தினம் நாள் முழுவதும் எரிந்து வருகிறது. அந்த வழியாக தினசரி தாசில்தார், துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பான பதவிகளில் இருக்கும் நபர்கள் சென்று வருகின்றனர்.ஆனால், அவர்கள் யாரும், பகல் நேரத்தில் எரியும் இந்த மின்சார விளக்கை அணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அதிருப்தியடைந்து, தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தும் மறுநாள் முதல் மீண்டும் அதேபோல், பகல் நேரத்தில் எரிய துவங்குகிறது. இதனால், தினம் இந்த மின் விளக்கு மூலம் மின்சாரம் வீணாகி வருவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி