உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சரக அளவிலான தடகள போட்டி

சரக அளவிலான தடகள போட்டி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் பள்ளி மாணவிகளுக்கான சரக அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், மண்டல உடற்கல்வி ஆய்வாளர் கோவிந்தன், ஐகொந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர் கோபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டிகள் 14 வயது மற்றும் 17 வயது, 19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் நடந்தது. 100 மீட்டர், 200 ,400, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஆகிய தடகள போட்டிகள் நடந்தது. இதில் 100 மீ., 200 மீ., நீளம் தாண்டுல் ஆகிய போட்டிகளில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சவுந்தர்யா முதல் இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி