உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பராமரிப்பு இல்லாத செப்டிக் டேங்க்ஓசூர் ஹசிங் ஃபோர்டு மக்கள் அவதி

பராமரிப்பு இல்லாத செப்டிக் டேங்க்ஓசூர் ஹசிங் ஃபோர்டு மக்கள் அவதி

ஓசூர்: ஓசூர் பாகலூர் ஹட்கோ வீட்டு வசதிவாரிய குடியிருப்பில், செப்டிக் டேங்குகள் நிரம்பி, வெளியேறும் கழிவுநீர் ஆகியவை வீடுகளில் புகுந்து வருவதால், குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மர்ம நோய் பரவுவதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.ஓசூர் பாகலூர் ஹட்கோவில், 2000க்ம் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அரசு ஊழியர்கள் வசிப்பதற்காக, ஏ, பி, சி மற்றம் டி வகுப்பு வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவற்றில், அரசு ஊழியர்கள் வீட்டு வசதிவாரியத்திற்கு வாடகை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிப்பிட கழிவுகள் குறிப்பிட்ட சில வீடுகளின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்கில் தேங்குகின்றன. இந்த செட்டிக் டேங் மூடப்பட்டு, அவை நிரம்பும் போது, நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் கழிவுநீரை அப்புறப்படுத்தி பராமரிக்க வேண்டும்.கடந்த பல ஆண்டாக பாகலூர் ஹட்கோ வீட்டு வசதிவாரிய குடியிருப்புகளில் செப்டிக் டேங் கழிவுகள் வெளியேற்றப்படவில்லை. செப்டிங் டேங் மூடிகளும் உடைந்து திறந்த வெளியில் காணப்படுகின்றன. இதனால், மழைகாலத்தில் திறந்தநிலையில் இருக்கும் செட்டிக் டேங்குகளில் மழை நீர் புகுந்து நிரம்பி விடுகின்றன. இதனால், செப்டிக் டேங் கழிவுகள், கழிவு நீர் ஆகியவை வீடுகளில் புகுந்து வருகின்றன.செப்டிக் டேங் கழிவுகள் தேங்கி நிரம்பும் போதும், இதுபோல் வீடுகளில் செட்டிக் டேங் கழிவுகள் அடிக்கடி புகுந்து வருகின்றன. இதனால், குடியிருப்பு வாசிகள் வீடுகளில் வசிக்கவும் முடியாமல், காலி செய்யவும் முடியாமல் குடும்பத்துடன் பரிதவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் பாகலூர் ஹட்கோ வீட்டுவசதிவாரிய வீடுகளில் நிரம்பும் செட்டிக் டேங் கழிவுகளை வெளியேற்றி பராமரிக்க எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.ஓசூர் நகராட்சியில் வீட்டு வசதிவாரிய வீடுகள் மட்டுமின்றி மற்ற வீடுகளில் இருந்து வெளியேறும் செப்டிக் டெங் கழிவுகளும் பெரும்பாலும் திறந்த வெளி சாக்கடை கால்வாய்வாய்களில் வெளியேற்றப்படுகின்றன. இதனால், அவற்றில் ஈக்கள் போய் அமர்ந்து வீட்டு குழந்தைகள், பெரியவர்களுக்கு பல்வேறு மர்ம நோய்கள் பரவுகின்றன. பொதுமக்கள் புகார் தெரிவித்தால், நகராட்சி துப்புரவு பணியாளர்களை அனுப்பி அவர்கள் மூலம் தற்காலிகமாக செப்டிக் டேங் கழிவுகளை அகற்றி வருகின்றனர். நிரந்தரமாக செப்டிக் டேங் கழிவுகளை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நகராட்சி பகுதியில் செட்டிக் டேங் கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ