மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவியர் கலைத்திருவிழாவில் கலக்கல்
09-Nov-2024
அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுஓசூர், நவ. 10-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முத்துராயன் ஜி.பி., அரசு துவக்கப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், 1 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள், 2 நாட்கள் நடந்தன. இதில் பங்கேற்ற பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 2ம் வகுப்பு மாணவி ஸ்ரீஹரிணி, தமிழ் ஆத்திச்சூடி ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பெற்றார். இதன் மூலம், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையறிந்த பள்ளி முன்னாள் மாணவர்களான சதீஷ், தமிழ்ச்செல்வன், சபரி, சிவமலை, உதய், விஸ்வா ஆகியோர், நேற்று பள்ளிக்கு சென்று மாணவியை பாராட்டி பரிசுகளை வழங்கினர். தலைமையாசிரியர் பொன்நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
09-Nov-2024