உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்

முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், புலிக்கரை பஞ்., உட்பட்ட சென்னியம்பட்டி முனியப்பன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழா கடந்த, 14 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், தீர்த்தக்குடம், பால்குடம் ஊர்வலம் ஆகியவை நடந்தன. பின்னர், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. நேற்று, யாகசாலையில் வைத்து, பூஜை செய்யப்பட்ட கலசநீரை ஊர்வலமாக எடுத்து சென்று, முனியப்பன் சுவாமிக்கு ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு புனித நீர் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை