உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரேணுகா எல்லம்மா தேவி கோவில் கும்பாபிஷேகம்

ரேணுகா எல்லம்மா தேவி கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர், நவ. 12-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சின்னஎலசகிரி பகுதியில் பழமையான ரேணுகா எல்லம்மா தேவி கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. கணபதி ஹோமம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கிருஷ்ணகிரி பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், சமூக ஆர்வலர் மணி, ஓசூர் ஸ்கிராப் டீலர் அசோசியேசன் தலைவர் முருகன் மற்றும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை