ஏரியில் மூழ்கிய தொழிலாளி பலி
ஓசூர்: ஓசூர் நல்லுார் அருகே உள்ள ஏரியில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, 31 வயது மதிக்கத்தக்க ஆண், மீன் பிடிக்க வலை வீசினார்.அதற்காக ஏரிக்குள் இறங்கி நின்றவர், ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கி மூழ்கினார். இதை அப்பகுதியில் நின்றிருந்த வாலிபர் பார்த்து, நல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.ஓசூர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன், நல்லுார் போலீசார் சடலத்தை தேடி மீட்டனர். விசாரணையில், ஏரியில் மூழ்கி உயிரிழந்தது, ஓசூர் அனுமந்த் நகரை சேர்ந்த முனிராஜ், 31, என்பதும், சுமை துாக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.