உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கங்கையம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலம்

கங்கையம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலம்

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துாரில் அமைந்துள்ள கங்கையம்மன் கோவில் ஆடிமாத திருவிழா நேற்று நடந்தது. காலை, கங்கையம்மனுக்கு அபி‍ஷேக, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். மதியம், 2:00 மணிக்கு, சின்னமுத்துார், பெரிய முத்துார், நடுமுத்துார், குப்பரகாதன் கொட்டாய் ஆகிய கிராமங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு படைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு வேண்டிக் கொண்டனர்.திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, சின்னமுத்துார், பெரிய முத்துார், நடுமுத்துார், குப்பரகாதன் கொட்டாய் கிராமங்களைச் சேர்ந்த ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை