பெரிய ரவுண்டானா அமைப்பு: போக்குவரத்து கடும் பாதிப்பு
ஓசூர்: ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் முன், மிகப்பெரிய அளவில் ரவுண்-டானா அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தேன்கனிக்கோட்டை சாலையில் தினமும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் எதிரே, மாநில நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் தனியார் பங்க-ளிப்பில் சில ஆண்டுகளுக்கு முன், பெரிய ரவுண்டானா அமைக்-கப்பட்டது. ஏற்கனவே, இப்பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், சாலையின் அளவு குறைந்து போக்-குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்-துறை அனுமதியுடன் அதிகளவிலான சாலையை ரவுண்டானா அமைக்க பயன்படுத்தியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.ரயில்வே ஸ்டேஷன் நுழைவுவாயில் முன், தேன்கனிக்கோட்-டையில் இருந்து ஓசூர் நோக்கி வரும் வாகனங்கள், ரயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல திரும்புகின்றன. அதனால் அப்ப-குதியில் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் நின்று செல்ல வேண்டியுள்ளது. ரவுண்டானா பகுதியில் இடம் குறுக-லாக உள்ளதால், காலை, மாலை மட்டுமின்றி, அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நிற்-கின்றன. அதை, போலீசார் சரி செய்யவே, நீண்ட நேரமாகி விடு-கிறது. தவிர, ரவுண்டானாவும் பராமரிப்பின்றி உள்ளது. எனவே, ரவுண்டானாவை இடித்து விட்டு, சிறிய அளவிலான ரவுண்டானா அமைத்து, சாலையின் நடுவே சென்டர் மீடியன் வைத்து, வாக-னங்கள் சீராக செல்ல, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.