உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உரிமமின்றி மரக்கன்று விற்றால் சட்ட நடவடிக்கை

உரிமமின்றி மரக்கன்று விற்றால் சட்ட நடவடிக்கை

கிருஷ்ணகிரி, தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செயல்படும் தனியார் நாற்று பண்ணையாளர்கள், தமிழகத்தில், இதர மாவட்ட விவசாயிகளுக்கும் பழக்கன்றுகள், காய்கறி நாற்றுகளை விற்பனை செய்கின்றனர். ஆகையால், விதைச்சட்டம் - 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை - 1983 ஆகிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, பழக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வதை உறுதி செய்யவும், தவறு செய்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்வதையும், விதை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உரிமம் பெறாமல் மேற்கண்ட நாற்றுகள் விற்பனை செய்வோர் மீது, நீதிமன்ற வழக்கு தொடரப்படும்.எனவே, குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யும் காய்கறி பயிர்களின் நாற்றுக்களின் தரத்தையும், கொள்முதல் செய்த பட்டியலையும் பராமரிக்க வேண்டும். பழ மரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் குழித்தட்டுகளின் உற்பத்தி செய்யும் காய்கறி நாற்றுகள் தொடர்பான இருப்பு பதிவை பராமரித்து, முறையான விற்பனை ரசீதுகள் வழங்க வேண்டும். உரிமம் பெற்றுள்ள நாற்று பண்ணையாளர்களுக்கு மட்டுமே, விதைகளை விற்பனை செய்வதுடன், விதை உரிம எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும். விதை மற்றும் நாற்றுகள் விற்பனை உரிமம் பெற, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகம், 04342 230157 என்ற எண்ணிலும், தங்கள் பகுதிக்கான விதை ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி