உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்க ஆலோசனை

எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்க ஆலோசனை

கிருஷ்ணகிரி, டிச. 25-கிருஷ்ணகிரியில், அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கையெழுத்து இயக்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எல்.ஐ.சி., முகவர் வசந்தா வரவேற்றார். கிளை பொருளாளர் பெரியசாமி தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், கோட்டத் தலைவர் முருக நாயனார், கோட்ட செயலாளர் சிவமணி, சி.ஐ.டி.யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் பேசினர். கோட்ட பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார். கூட்டத்தில், முகவர்களுக்கு வழங்கப்படும் குழு காப்பீடு தொகை மற்றும் 69 வயதில் இருந்து, 85 வயதாக உயர்த்த வேண்டும். மன்ற முகவர் அல்லாத மற்ற அனைத்து முகவர்களுக்கும் குடும்ப மருத்துவ காப்பீடு, 2 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும். புதிய மாற்றங்களால் முகவர்களின் கிளப் மெம்பர்களுக்கான இழப்புகளை கவனத்தில் கொண்டு சலுகைகள் வழங்க வேண்டும். பாலிசிதாரர்களுக்கு போனஸ் விகிதங்களை அதிகரிப்பது குறித்து விவாதித்து உயர்த்த வேண்டும். சம்வர்தன் ஓய்வூதியத் திட்டம், முகவர்களின் முன்பணம் மற்றும் பிற நலத்திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ