உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் பயிற்சி

உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் பயிற்சி

கிருஷ்ணகிரி, சென்னை தமிழக சுகாதார பாதுகாப்புத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, 36 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், போலீசார், நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு, தனியார் ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு, அவசர காலங்களில் அடிப்படை உயிர் ஆதரவு அளிக்கும் நுட்பங்கள் குறித்து, ஐந்தாம் கட்ட பயிற்சி நடந்தது.இதில், மக்களுக்கான, அடிப்படை உயிர் காக்கும் சிகிச்சை நுட்பங்கள், நோயாளிகளுக்கான, உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவ கல்லுாரி முதல்வர் சத்தியபாமா தலைமை வகித்தார். உள்ளிருப்பு மருத்துவர் செல்வராஜ், துணை முதல்வர் சாத்விகா, அவசர சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் லட்சுமிஸ்ரீ, விபத்து சிறப்பு மருத்துவர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஐந்து நாள் நடந்த பயிற்சியில், 150 பேர் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை