மேலும் செய்திகள்
கூட்டுறவு கடனுதவிகளை பயன்படுத்த அழைப்பு
28-Aug-2025
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரியில், 3,976 பயனாளிகளுக்கு, 34.64 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.சேலம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி, அடையாள அட்டைகளை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.அதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுா ரியில், மகளிர் சுயஉதவி கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பெரியசாமி வரவேற்றார்.விழாவில், 645 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, 3,976 பயனாளிகளுக்கு, 34.64 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள், 506 நபர்களுக்கு சுய உதவிக்குழு உறுப்பினர் அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கி பேசினார். இதில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் ரமேஷ், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.
28-Aug-2025