மேலும் செய்திகள்
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
27-Sep-2025
கிருஷ்ணகிரி, தேவசமுத்திரம் வி.ஏ.ஓ., கீதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், நேற்று முன்தினம் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. சீதா புகார் படி, கே.ஆர்.பி., டேம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.அதேபோல காமன்தொட்டி வி.ஏ.ஓ., சங்கர் மற்றும் அலுவலர்கள் சப்படி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற லாரியை சோதனையிட்டதில், 5 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. சங்கர் புகார் படி, சூளகிரி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
27-Sep-2025