உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர்: சூளகிரி தாசில்தார் மோகன்தாஸ் மற்றும் வருவாய்த்துறை ஊழி-யர்கள், ஓசூர் - ராயக்கோட்டை சாலையிலுள்ள உத்தனப்பள்ளி ஆர்.ஐ., குடியிருப்பு அருகே வாகன சோதனை செய்தனர். அவ்-வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 2 கறுப்பு கிரானைட் கற்களை உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஏற்றி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்-தனர். உத்தனப்பள்ளி வி.ஏ.ஓ., ராமச்சந்திரன் புகார் படி, போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !