உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

பேரிகை, சூளகிரி அடுத்த பேரிகை அருகே ராமச்சந்திரம் பஸ் ஸ்டாப் அருகே, புக்கசாகரம் வி.ஏ.ஓ., வெண்மதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியில் சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் ஜல்லி கற்களை, புக்கசாகரத்தில் இருந்து ஓசூருக்கு கொண்டு செல்வது தெரிந்தது.இதனால், லாரியை பறிமுதல் செய்த வி.ஏ.ஓ., வெண்மதி, பேரிகை போலீசில் ஒப்படைத்தார். அவர் புகார் படி, பேரிகை அருகே பிக்கிலி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவராஜ் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி