உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் பாரதி மற்றும் அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், சூளகிரியிலிருந்து ஓசூருக்கு, 5 யூனிட் ஜல்லி கற்களை கொண்டு செல்வது தெரிந்தது.லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஹட்கோ போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். உதவி இயக்குனர் பாரதி புகார்படி, லாரி டிரைவரும், உரிமையாளருமான ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளியை சேர்ந்த ராஜேஷ், 29, மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை