உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மா.திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம்; 165 பேர் கைது

மா.திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம்; 165 பேர் கைது

கிருஷ்ணகிரி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், கோட்டீஸ்வரன், வெங்கடேஷ், முருகன், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில், ஆந்திரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப, 6,000 ரூபாய், 10,000 ரூபாய், 15,000 ரூபாய் என, மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழகத்தில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களிடம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட, 165 மாற்றுத்திறனாளிகளை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை