மொபைல் கடை முன் நிறுத்திய டூவீலரை திருடியவர் கைது
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பழையபேட்டையை சேர்ந்தவர் முகமது சபீர், 20, விவசாயி. இவர் கடந்த, 13 மதியம், தன் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு மொபைல் கடை அருகே நிறுத்தி சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், காவேரிப்பட்டணம் அடுத்த பன்னிஹள்ளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருணாச்சலம், 25, என்பவர் பைக்கை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக்கை மீட்டனர்.