மண்டல பூஜை நிறைவு விழா மரக்கன்று வழங்கி அழைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் வள்ளுவர்புரம் கிரா-மத்தில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 5ல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பூஜை நடந்து வரும் நிலையில், வரும், 21ல், 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடக்க உள்ளது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று வள்ளுவர்புரம் கிராமத்தில் நடந்தது. இதில், மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, வனச்சரக அலுவலர் முனியப்பன், ஓய்வு பெற்ற டி.இ.ஓ., ராஜன் ஆகியோர், 'வீடுகள் தோறும் மரக்கன்று' என்ற அடிப்படையில், அழைப்பிதழ்களுடன் மரக்கன்றுகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர். இதில், பஞ்., தலைவர் சாந்தி தேவராஜ், முன்னாள் பஞ்., தலைவர் சின்னண்ணன் உள்பட ஊர்மக்கள் பலர் பங்கேற்-றனர்.