உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாங்கனி கண்காட்சி; ஆய்வு கூட்டம்

மாங்கனி கண்காட்சி; ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாங்கனி கண்காட்சி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். எஸ்.பி., தங்கதுரை முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தை தொடர்ந்து மாங்கனி கண்காட்சி நடத்த இடம் தேர்வு செய்யும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து கூறியதாவது: ஆண்டுதோறும் மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக, அரசு சார்பில் மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில், 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி இம்மாதம் (மே மாதம்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மற்றும் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கண்காட்சிக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களின் பாதுகாப்பு, இடவசதி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாங்கனி கண்காட்சி நடக்கும் இடம் வரும் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இணை இயக்குனர்கள் (வேளாண்மை) பச்சையப்பன், (தோட்டக்கலைத்துறை) இந்திரா, உதவி இயக்குனர் (நிலஅளவை) ராஜ்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வி, கிருஷ்ணகிரி பி.டி.ஓ., உமாசங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை