மாணவ, மாணவியருக்கு தற்காப்பு கலை சான்றிதழ்
சூளகிரி, சூளகிரியில், இந்தியன் கிங் சவுலின் குங்பூ தற்காப்பு கலை கற்ற மாணவ, மாணவியருக்கு, பட்டய தேர்ச்சி பயிற்சி முகாம் நடந்தது. கிரான்ட் மாஸ்டர் பவித்ராமன் தலைமை வகித்தார்.வேப்பனஹள்ளி, மாதேப்பள்ளி, பேரிகை, அத்திமுகம், உத்தனப்பள்ளி, குருபரப்பள்ளி பகுதிகளில் இருந்து பங்கேற்ற, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, பட்டய சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை, சூளகிரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், சமூக சேவகர்கள் சீனிவாசன், மாதேஷ் ஆகியோர் வழங்கினர்.முகாமில், மேகனா, ஹரிப்பிரியா, கோவர்தன், யுகேந்தர், விவிதா, ரோஹித், பிரதீப், சரவணா, ராஜேஷ் ஆகிய, 9 மாணவ, மாணவியர் கருப்பு பட்டயம் தேர்ச்சியில் தேர்வு பெற்றனர்.