வாலிபால் போட்டியில் வென்ற அரசு பள்ளிக்கு மேயர் பாராட்டு
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சமீபத்தில் நடந்தன. இதில், வாலிபால் போட்டியில் ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.போட்டியில் வென்ற மாணவர்கள், ஓசூர் மாநகர மேயர் சத்யாவை நேற்று நேரில் சந்தித்து, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை காட்டி வாழ்த்து பெற்றனர். மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என, மாணவர்களை மேயர் சத்யா கேட்டுக்கொண்டார். பயிற்சியாளர் தாயுமானவன் உடனிருந்தார்.