மேலும் செய்திகள்
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
17-Dec-2024
ஊத்தங்கரை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கரியபெருமாள் வலசை ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட குழு உறுப்பினர் முத்துகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அண்ணாமலை பேசினார். பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு, 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு 45 ரூபாய், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 54 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
17-Dec-2024