உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்களுக்கு மாதிரி தேர்வு

மாணவர்களுக்கு மாதிரி தேர்வு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவியரின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையிலும், மன அழுத்தத்தை குறைக்கவும், ஓசூர் அருகே இயங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில், மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. நிறுவனத்தை சுற்றி, 15 கி.மீ., சுற்றளவில் உள்ள, 20 அரசு பள்ளிகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர். மாணவ, மாணவியருக்கு தேர்வு கருவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், டாடா நிறுவனம் மூலம், 'டிவி' கம்ப்யூட்டர், மல்டி மீடியா கருவிகள் போன்ற பல்வேறு தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனம் உதவியுடன், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, பொம்மை செய்தல், கதை எழுதுதல், ஸ்டோரி போர்டிங், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், புத்தக உருவாக்கம் மற்றும் நாடக நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் செய்யப்பட்ட கலை படைப்புகளை, உள்ளூரை சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் சேர்ந்து மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி