உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெள்ள பாதிப்பு பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெள்ள பாதிப்பு பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை கண்கா-ணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தனர். அதன்படி, ஊத்தங்கரை டவுன் பஞ்., சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள, 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு சமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். சிங்காரப்பேட்டை அம்-பேத்கர் நகரிலுள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் அப்ப-குதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்ட முகாம் மற்றும் போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர்., நகர் பகுதி, ஜிங்கல்க-திரம்பட்டி, பந்திரவள்ளி காலனி பகுதியில் வெள்ள பாதிப்பு-களை அவர்கள் பார்வையிட்டு, மக்களுக்கு தேவையான அடிப்-படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறி-யதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகமும், தீயணைப்பு துறையி-னரும் விரைந்து ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு முகாமில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்-டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ