உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 70க்கும் மேற்பட்ட பஞ்., தலைவர்கள் பதவி நீட்டிப்பு கோரி கலெக்டரிடம் மனு

70க்கும் மேற்பட்ட பஞ்., தலைவர்கள் பதவி நீட்டிப்பு கோரி கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி, டிச. 17-கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயுவிடம் நேற்று, தமிழ்நாடு பஞ்., தலைவர்கள், கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில், 70-க்கும் மேற்பட்ட பஞ்., தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள், அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:நாங்கள், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பஞ்.,களின் தலைவராகவும் ஒன்றிய குழு உறுப்பினர்களாகவும் கடந்த, 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். நாங்கள் பதவியேற்ற கடந்த, 2020 ஜன., 6ல் கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலம் கருதி பணியாற்றுவதிலேயே, 2 ஆண்டுகள் கடந்து விட்டன. எங்கள் பஞ்.,களுக்கு தேவையான அடிப்படை பணிகள் செய்து முடிக்க மீதமுள்ள, 3 ஆண்டு காலம் போதவில்லை. தற்போது வரை தேர்தல் அறிவிக்காத சூழ்நிலையில், தேர்தல் நடக்கும் வரை, எங்கள் பதவி காலத்தை நீட்டிப்பு செய்ய கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி