உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

சூளகிரி கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஏனுசோனை அருகே புறம்போக்கு பீடு கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன், 44. இவரது மனைவி சுசீலா, 38. இவர்களுக்கு, ரேணுமதி என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சுசீலா கடந்த, 11ம் தேதி, தன் மகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அவர் திரும்பி வராததால், நேற்று முன்தினம் சூளகிரி போலீசில் கணவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, சுசீலா மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ