குழந்தையுடன் தாய் மாயம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பெரியகரடியூரை சேர்ந்தவர் விஜய், 33. இவரது மனைவி பிரீத்தி, 25. இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. விஜய் தன் மனைவி மற்றும் குழந்தையுடன், ஓசூர் ஜூஜூவாடி பூங்கா நகரில் தங்கி, மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 9ல் காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியே சென்ற பிரீத்தி திரும்பி வரவில்லை. அவரது கணவர் சிப்காட் போலீசில் கொடுத்த புகாரில், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.