உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 மாதங்களாக சாலையில் ஓடும் தண்ணீர் போச்சம்பள்ளி வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 மாதங்களாக சாலையில் ஓடும் தண்ணீர் போச்சம்பள்ளி வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 மாதங்களாக சாலையில் ஓடும் தண்ணீர் போச்சம்பள்ளி வாகன ஓட்டிகள் கடும் அவதிபோச்சம்பள்ளி, ஜன. 3-கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து சந்தூர் வழியாக, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், வெப்பாலம்பட்டி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, பெஞ்சல் புயலின் போது பெய்த மழையின் தாக்கத்தால், தண்ணீர் தற்போது வரை சாலையில் ஓடுகிறது.இந்த சாலையில் போச்சம்பள்ளி சிப்காட் பணிக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து சாலையில் தண்ணீர் ஓடும் நிலையில், கனரக வாகனங்கள் செல்லும்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர், நடந்து செல்வோர் மீது தண்ணீர் சிதறுவதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சாலையில் தண்ணீர் ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி