மேலும் செய்திகள்
முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி விழா
30-Oct-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூரில் முத்துராமலிங்க தேவரின், 118வது தேவர் ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. முக்குலத்தோர் நலச்சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வசித்தார். முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. முக்குலத்தோர் நலச்சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, துணைத்தலைவர் ஜெயவீரன் பொருளாளர் பாண்டித்துரை, பா.ஜ., மேற்கு மண்டல பொறுப்பாளர் மஞ்சு உள்பட, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* ஊத்தங்கரை அடுத்த, தாண்டியப்பனுாரில் பசும் பொன் முத்துராமலிங்க தேவரின், 118வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா நேற்று நடந்தது. ஊத்தங்கரை அகமுடையார் நலச்சங்க தலைவர் நல்லாசிரியர் தர்மலிங்கம் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். இதில், வார்டு கவுன்சிலர் சுமித்ரா தவமணி மற்றும் பலர் முத்துராமலிங்கத் தேவர் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
30-Oct-2025