உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பல்நோக்கு கட்டடம் திறப்பு

பல்நோக்கு கட்டடம் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் பெரியமுத்துார் ஊராட்சி நெக்குந்தி கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடைக்காக பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டது. அதை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூஜை செய்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, ஊர்கவுண்டர்கள் பெரியசாமி, சீனிவாசன், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் சின்னசாமி, கவுன்சிலர் வேடியப்பன், ஒன்றிய மாணவர் அணி துணைத்தலைவர் நிரஞ்சன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை