உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில், மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், சிகரலப்பள்ளியில் உள்ள ரேஷன்கடை வாடகையை அரசே செலுத்தி பயனாளர்களிடம் ரேஷன் அட்டைக்கு ஆண்டுக்கு, 50 ரூபாய், பல ஆண்டுளாக வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சுண்டன், ஆஞ்சலா மேரி, வட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரன், மல்லிகா, அன்வர்பாஷா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ