உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு ஆர்ப்பாட்டம்

முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு ஆர்ப்பாட்டம்

ஓசூர்: ஓசூர், இன்னர் ரிங்ரோட்டில், முனீஸ்வர் நகர், வ.உ.சி., நகர், நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் சந்திக்கும் பகுதி, 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என அழைக்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் அப்பகுதிக்கு, 'தந்தை பெரியார் சதுக்கம்' என தீர்மானம் நிறைவேற்றி, கடந்த ஜன., 21ம் தேதி பெயர் பலகை திறக்கப்பட்டது. இதற்கு ஹிந்து அமைப்புகள் மற்றும் குடியிருப்புவாசிகளின் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீண்டும் 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என பெயர் வைக்க வலியுறுத்தி, சட்ட போராட்டம் நடத்த, முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு என, ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில், 'தந்தை பெரியார் சதுக்கம்' என்ற பெயரை நீக்கி விட்டு, 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என பெயர் வைக்க வலியுறுத்தி, தலைவர் ராமசாமி தலைமையில் நேற்று காலை, முனீஸ்வர் நகர் சர்க்கிள் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டனர். செயல் தலை வர் முத்துலட்சுமி, பொதுச்செயலாளர் பிரபாகர், துணைத்தலைவர்கள் உதயகுமார், சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை