உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முனியப்பன் கோவில் திருவிழா பெண்கள் பால்குட ஊர்வலம்

முனியப்பன் கோவில் திருவிழா பெண்கள் பால்குட ஊர்வலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி, உத்தேரிக்கொட்டாய் மலைமேல் அமைந்திருக்கும், கல்லித்திபாறை காட்டு முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு பெண்கள் பால்குடங்களை எடுத்துக் கொண்டு, மேள தாளங்கள் முழங்க கிராமத்தின் வழியாக நகர் வலத்துடன் மலைமீதுள்ள முனியப்பன் கோவிலுக்கு சென்றனர். அங்கு முனியப்பனுக்கு பால் அபி ேஷகம் செய்து வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து முனியப்பனுக்கு பூஜை செய்து சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளானோர் கலந்து கொண்டனர். நாளை (ஜூன் 1) பகல், 12:00 மணிக்கு மேல், மலைமீதுள்ள முனியப்பன் கோவிலில் கிடா வெட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ