மேலும் செய்திகள்
வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம்
29-Apr-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்கு ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து, தேசியக்கொடி ஊர்வலம் நேற்று நடந்தது.ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் முன் புறப்பட்ட ஊர்வலம் ரவுண்டானா வரை சென்றது. விஷ்ணு யோகானந்தா சுவாமிஜி தலைமை வகித்தார். ஆர்.பி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பொன்னுசாமி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முன்னாள் சேர்மன் டாக்டர் தேவராசு, மாவட்ட பொருளாளர் குணசேகரன், துணைத் தலைவர் ராஜா, சேர்மன் ரஜினி சங்கர், துணை சேர்மன் சிவகிரி முருகன், செயலாளர் செல்வன், பொருளாளர் முனியப்பன், முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
29-Apr-2025