உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாரியில் கிரானைட் கல் கடத்திய இருவருக்கு வலை

லாரியில் கிரானைட் கல் கடத்திய இருவருக்கு வலை

லாரியில் கிரானைட் கல்கடத்திய இருவருக்கு வலைகிருஷ்ணகிரி, அக். 9-பேரிகை எஸ்.ஐ., சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், மஸ்தி - பேரிகை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்திவிட்டு, இருவர் தப்பி ஓடினர். போலீசார், லாரியை சோதனையிட்டதில், 35 டன் அளவிலான கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த ஓசூர், கோனேரிப்பள்ளியை சேர்ந்த வேணுகோபால், 37, சப்படியை சேர்ந்த சரவணன், 38 ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ