வீட்டு வசதி குடியிருப்பில் சோதனை வாடகைக்கு விட்ட 12 பேருக்கு நோட்டீஸ்
ஓசூர்: ஓசூரில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீடுகளை, உள்வாடகைக்கு விட்டிருந்த, 12 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்-பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலை-யோரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமாக அடுக்-குமாடி வாடகை குடியிருப்புகள் உள்ளன.ஏ, பி, சி, டி, இ என வகைப்படுத்தப்பட்டு மொத்தமுள்ள, 240 வீடுகள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன.ஒரு சில அரசு ஊழியர்கள் வீடுகளை வாங்கி, அதை தனிநபருக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளனர். இதையறிந்த, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், ஓசூர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் பாண்டியராஜ், நேற்று முன்தினம் வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளில் சோதனை செய்தார்.அப்போது, ஏ மற்றும் பி பிளாக் வீடுகள் உள் வாடகைக்கு விடப்-படவில்லை.ஆனால், சி, டி, இ பிளாக்கில் மொத்தம், 12 வீடுகள் தனி நபர்க-ளுக்கு உள்வாடகைக்கு விடப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும் ஒரு அரசு ஊழியர், டி மற்றும் சி பிளாக்கில் என இரு வீடுகளில் வாடகைக்கு இருப்பது தெரியவந்தது. 12 வீடுகளுக்கும் எச்ச-ரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.அடுத்த, 30 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். இல்-லாவிட்டால் உரிய பாதுகாப்புடன் வீட்டை காலி செய்வோம் என, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறினர்.